பிராட்வே:BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து தலைமைப்பொது மேலாளரின் ஆணவப் போக்கை கண்டித்தும்,மாற்றக்கோரியும் கண்டன போராட்டம் மதிய உணவு வேளையில் சென்னை பூக்கடை தொலைபேசி பரிமாற்றம் BSNL அலுவலக வாயிலில்  நடைபெற்றது.

இதில் NFTE அகில இந்திய தலைவர் C. K. மதிவாணன், BSNLEU மாநிலச் செயலாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியன், SNEA மாநில தலலவர் பூபாலன், செயலாளர் புத்த தேவ்.AIGETOA மாநிலச் செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசுகையில், தற்போதைய CGM பார்த்திபன் செயலால் சேவைவீழ்ச்சி, வருவாய்குறைவு, துன்புறுத்தல் நடந்துவருவதால் இதன் பாதிப்பு பொதுமக்களுக்கு நேரடியாக உள்ளது. 

மேலும் ஊழியர்கள் திடீர் இடமாற்றம், பதவி மாற்றம், 2வது சனிக்கிழமை விடுமுறை நீக்கம் இதனால் ஊழியர்களுக்குமன உளைச்சல்ஏற்படுகிறது.

மேலும் அங்கீகாரம் பெற்ற சங்கங்களுடன் சந்திப்புகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

CGM அணுகுமுறை சரியாக இல்லாததால் தனியார் நிறுவனங்

கள் வெற்றிடத்தை நிரப்பி வருகின்றன. 

ஆகவே எங்கள் கோரிக்கையாக தற்போதைய CGM மை உடனடியாக மாற்றி நிர்வாக சிக்கலை தீர்க்க வேண்டும், சங்கங்களும் ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், 

நியாயமான மனித வளக்கொள்கைகளுடன் கூடிய ஆலோசனை கட்டமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும், 

பொதுசேவையை மீண்டும் உயிர்ப்பிக்க-4G தயார் நிலை, FTTH விரிவாக்கம், அரசு மற்றும் பெரிய வாடிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 250 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.