திருவொற்றியூர்:
பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகங்கள் சார்பாக உலக வீடற்றோர் தினம் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து
சென்னை வடக்கு மண்டலம் சார்பாக திருவொற்றியூரில் உள்ள தியாகராய சுவாமி திருக்கோயில் முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மூலம் நடத்தப்பட்டது.

ரெகபோத் கல்வி அறக்கட்டளை
பொருளாளர் மாரியப்பன் அவர்கள் தலைமையிலும், சுகாதார அதிகாரி ஷேக் மீரான் மற்றும் சுகாதார ஆய்வாளர் சையது ஆகியோரின் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் ஒயிலாட்டம்,வீதி நாடகம், பொம்மலாட்டம், மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சுகாதார ஆய்வாளர் சையது அவர்கள் வீடற்றோர் இல்லாத சமூகத்தை உருவாக்கும் என்ற நோக்கத்தில் கைரேகை பிரச்சாரம் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் காப்பக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள்கள் தங்களது கைரேகை பிரச்சாரம் பதிவு செய்து ஆதரவு தெரிவித்தனர்.

ரெகபோத் கல்வி அறக்கட்டளை காப்பகத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிலட்சுமி அவர்கள் ஆதரவற்றோர் இல்லாத சமூகத்தை படைப்போம் என்கிற உறுதி மொழியை வாசிக்க அனைவராலும் ஏற்கப்பட்டது.

ரெகபோத் கல்வி அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மண்டலம் சார்ந்த அனைத்து திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.