சென்னை:
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை போற்றும் விதமாக மாநில அளவிலான மாபெரும் சிலம்ப போட்டி அகத்தியாவின் சென்னை சிலம்ப கூடம் மற்றும் பாரத் பல்கலைக்கழகம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர்.

மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு சாதனை பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இப்போட்டியை மாஸ்டர் தீபா முத்துக்குமார் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தி வைத்தார். மேலும் இந்நிகழ்வை பாரத் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் திரு சந்தீப் ஆனந்த் மற்றும் மகா குரு அகத்தியா ஞானம் ஆகியோர் துவங்கி வைத்து சிறப்பித்தனர்.