திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிமாபாத் சோலார் சிட்டி எதிரில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.இந்த தோப்பின் கரைகள் ராமாயணம் தோப்பு ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் வினோத், விக்கி, சின்னத்தம்பி, தாஸ், சந்திர பிரகாஷ் என்கின்ற அஜித் லட்சுமணன், சுமன், ஆகியோர் சுமார் 30க்கும் மேற்பட்ட தினக்கூலி ஆட்களை நியமித்து தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு கரையிலும் அதன் தொடர்ச்சியாக உள்ள ராமாயணம் தோப்பு ஆற்றுப்படுகையில் இருசக்கர வாகனத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கிராமிய காவல் எல்லை உட்பட்ட இப்பகுதிகள் மணல்களை கொள்ளையடித்து மூட்டைகளாக கட்டி வாணியம்பாடி நகரப் பகுதியில் உள்ள பஷீராபாத், ஷாகிராபாத், கப்ராபாத், முஸ்லிம்பூர் மட்டக்கார் தெரு போன்ற இடங்களிலும் கிராமிய எல்லைக்குட்பட்ட கரிமாபாத் சோலார் சிட்டி பூக்குட்டி போன்ற இடங்களுக்கு மணல் சப்ளை செய்து வருகின்றனர்.

மேற்கூறிய நபர்கள் சுமார் 10 இருசக்கர வாகனங்களில் நாள் ஒன்றுக்கு நான்கு லோடு மணல்களை கொள்ளையடித்து விற்பனை செய்து வருகின்றனர் ஒரு லோடு மணல் 1500 வீதம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு நான்கு லோடு மணல் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிய வருகிறது.

மேலும் அஜித் என்பவர் மட்டும் மூன்று இருசக்கர வாகனங்களை வைத்துள்ளதாகவும் அவர் ஒருவர் மட்டுமே ஒரு நாளைக்கு 12 லோடு மணல்களை விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணியாள் ஒருவருக்கு 700 விதம் தினக்கூலி கொடுக்கப்படுவதாக தெரிய வருகிறது.

மேலும் இவர்கள் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் 📑 ஏதும் இன்றி
திருட்டு வாகனங்களை பயன்படுத்துகின்றனராம்.

மேலும் இருசக்கர வாகனங்கள் (குறிப்பாக சூப்பர் எக்ஸ்எல் மட்டும் )திருடி விற்கும் நபர்களுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிய வருகிறது.

மேலும்
இப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை எந்தவித பயமும் இன்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டு மணல் விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பணி நிமித்தமாக செல்லும் பொதுமக்கள் மீது மணல் கொள்ளையர்கள் இருசக்கர வாகனங்களை அதி வேகமாக இயக்கி அவர்களின் மீது மோதுவதை போன்று செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து தகவல் தெரிந்தும் கிராமிய காவல்துறை,நகர காவல் துறை, வருவாய் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

மேலும் திருமாஞ்சோலையை சேர்ந்த
சுரேஷ் என்கின்ற நபர் மணல் கொள்ளையர்களிடம் ஒரு வாகனத்திற்கு 500 வீதம் பிரதி வாரம் மாமுல் கொடுத்து விட வேண்டுமாம்.

இப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் 10 இருசக்கர வாகனங்களுக்கு வாராவாரம் ஐயாயிரம் வீதம் மாமுல் வசூலிப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் சட்டவிரோத மணல்களை சோலார் சிட்டி பகுதியில் இருப்பு வைத்து டாட்டா ஏஸ் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கு டெலிவரி கொடுப்பதாகவும் தகவல்கள் தெரிய வருகிறது.

இவர்கள் மீது நடவடிக்கை மேற்
கொள்ள தவறிய காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீது மாவட்ட காவல் துறையும், மாவட்ட வருவாய் துறையும் விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் நடைபெற்று வரும் மினி மணல் குவாரியை தடுத்து நிறுத்தி நிலத்தடி நீர் மற்றும் விளைநிலங்களையும் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.