திருவொற்றியூர்:
திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
இச்சங்கத்தின் தலைவர் திருமதி எம். அருள்மொழி அவர்கள் தலைமையில் சங்க வளாகத்தில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் முன்னாள் நீதியரசர் மாண்புமிகு திரு. எஸ். சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி.ஜுலியட் புஷ்பா, திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய என். செந்தில் குமார் மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கள் சங்கத்தின் ( MHAA)
தலைவர் ஆர். சி. பால்கனகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள், திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்…