தூத்துக்குடி:
இந்திய அளவிலான ஜீவன் ஜெகரித் சேவா சென்ஸ்தான்
சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு டாக்டர் ( Honerary Doctorate) விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் தாலுக்கா , வீரபாண்டியன் பட்டணம் ,செந்தில் வீதியை – சேர்ந்த அரசியல் , சமூக சேவையில் – சிறந்த மக்கள் பணி செய்து வரும் அனைத்திந்திய மீனவர் நல கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளருமான – திரு . N.G. தனலிங்கம். அவர்களுக்கு கௌரவிக்கும் வகையில் மதிப்புறு டாக்டர் பட்டம் ( Honerary Doctorate) தேசிய அளவிலான கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


