தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்!

அண்ணாசாலை:
தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் கடந்த மூன்றாண்டுகளாக நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டுமென்றும், அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு எதிரான ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு துறையின் புள்ளியியல் நிர்வாகத்தினை சீர்படுத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் சென்னை, காயிதே மில்லத் மணி மண்டபத்திற்கு அருகிலுள்ள மின்சார வாரியத் திடலில் தமிழ்நாடு புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அறவழி போராட்டம் இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே. பால் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தினை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு. வெங்கடேசன் அவர்கள் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். இச்சங்கத்தின் மாநில செயலாளர் தி.செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பொதுச் செயலாளர் இரா. இரமேஷ் அவர்கள் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.

தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க முன்னாள் நிர்வாகிகள் இரா. சீனிவாசன்,
ப.அந்துவன் சோல், பொ. கண்ணதாசன், பால் பாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்கள் ச.டேனியல் ஜெயசிங், அண்ணா.குபேரன், ச.ஹேமலதா, மாவட்ட செயலாளர்கள் த. முத்துகுமாரசாமிவேல், அந்தோணி சாமி, இந்து சமய அறநிலைத் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் தெ.வாசுகி, தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை சங்க மாநில தலைவர், பி.அம்பேத்கார், தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலத் தலைவர் வே. விஜயகுமரன், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புநர்கள் சங்க மாநில செயலாளர் த.ஏழுமலை, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் உ.சுமதி, தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.என். நம்பிராஜன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெ.வே.அருள் டேனியல், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கற்பகம் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். இறுதியில் தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க பொருளாளர் சீ. அண்ணாமலை நன்றியுரை நல்கினார்.
மேலும் இந்த அறவழி உண்ணாவிரதப்போராட்டத்தில் தமிழ்நாடு அணைத்து மாவட்டங்களிலிருந்தும் 250க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
