மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

கல்லைக்குறிச்சி:
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கல்லைக்குறிச்சியிலுள்ள
சங்க அலுவலகத்தில் மாநிலத்தலைவர் பி.எஸ் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந் கூட்டத்தில் கீழ்கண்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
மத்திய,மாநில அரசுகள் மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதை
கைவிட்டு உரிமைகளை வழங்கிட வேண்டும்,
இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஓட்டுப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை கைவிட்டு வாக்குச்சீட்டு முறையை
நடைமுறைப்படுத்த வேண்டும்,
சேலம் – உளுந்தூர்பேட்டை சாலை விரிவாக்கப்பணிக்கு நிலம்
வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கிட வேண்டும்,
நாடு முழுவதும் போதை பொருட்களை தடை செய்யவும். மாணவர்கள், இளைஞர்களை காத்திடவும், பூரண மதுவிலக்கை அமுல் படுத்திடவும், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில
அரசுகளை வலியுறுத்தி வருகின்ற 13.03.2024 புதன் கிழமை அன்று
கல்லைக்குறிச்சியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு
செய்யப்பட்டது.

இதில் மாநில பொருளாளர் பி. குமார் நன்றியுரை நல்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் என்.எஸ். செல்வராஜ் நிறுவன பொது செயலாளர், பி.எஸ்.ரமேஷ் மாநில தலைவர், ஏ.டி. சக்திவேல் மாநில பொது செயலாளர், பி.குமார் மாநில பொருளாளர், பி.ஜெயப்பிரகாஷ் மாநில அமைப்பு செயலாளர், டி. கந்தநாதன் மாநில பிரச்சார செயலாளர், எஸ். கல்யாணசுந்தரம் மாநில செயற்குழு உறுப்பினர், கே.செல்வி மாநில மகளிரணி பொருளாளர், ஏ.பி.கோவிந்தராஜ், டி.காமராஜ், சங்கர் நாராயணன் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பி.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.