கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய. மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும், மக்கள் நல கோரிக்கைகள் குறித்தும் இதன் தலைவர் பி.எஸ் இரமேஷ் அவர்கள் தலைமையில் கல்லக்குறிச்சி டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுச்செயலாளர் முனைவர் என். எஸ். செல்வராஜ் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

மேலும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்வராஜ் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தாமல் பொருளாதார அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்,
வருங்காலங்களில் வாக்குசீட்டு முறையிலே தேர்தல்கள் நடத்தப்படவேண்டும்.
அரசு பணிகளில் தனியார் ஒப்பந்தகாரர்கள் மூலம் ஒப்பந்த தினக்கூலி, தற்காலிக முறையில் பணியாளர்கள் நியமனம் செய்வதை கைவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும்,
சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்திடும் வகையில் சாதி மறுப்பு திருமணங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும்,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பணியின்போது அரசு ஆணை எண்: 363 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்: 01.12.2004-ன் படி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் நிலமற்ற ஏழைகளுக்கு அந்த இடங்களை பட்டா வழங்கிடவும், அறநிலையத்துறை இதுவரை தரை வாடகை வசூலித்து வந்ததை கைவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.