சென்னை:அகில இந்திய ஒருங்கிணைந்த சட்ட நல மனித உரிமை துறை சார்பில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும் இதில் சென்னை சிலம்ப கூடத்தை சேர்ந்த தீபா முத்துக்குமார் அவர்களின் மாணவ மாணவிகளான அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெசி மோசஸ் பள்ளி மாணவி எம். வர்ஷினி ஸ்ரீ, சிலம்பத்தில் உலக சாதனை புரிந்ததற்கும், தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றதற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவன் ஆர். சுகன் அவர்களுக்கு சிலம்பத்தில் உலக சாதனை புரிந்ததற்காகவும், மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றதற்காகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .

முகப்பேர் சென்னை அரசுப்பள்ளி மாணவி பி. ஜீவா அவர்களுக்கு மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அண்ணாநகர் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி எஸ். பாவனா, அவர்களுக்கு மாநில அளவில் சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வென்றதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஸ்பார்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் பி.ஜோதம் டேனியல் அவர்களுக்கு மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
