தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் புதுச்சத்திரம் காவல்துறை மற்றும் மெத்தன போக்கோடு செயல்படும் நாமக்கல் மாவட்ட காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
நாமக்கல்:
பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது அலட்சியம் காட்டியும், குறிப்பாக வன்கொடுமை வழக்குகளில் அலட்சியத்தோடும், மெத்தன போக்கை கையாளக்கூடிய செயல்பாட்டை கண்டித்தும், வன்கொடுமை வழக்கை நீர்த்துப் போக செய்யக்கூடிய வகையில் பொது ஊழியர்களாக இருந்து கொண்டு பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய மனுக்கள் மீதும் அலட்சியத் தன்மையோடும் செயல்படக்கூடிய புதுச்சத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோமதி மற்றும் மீதும், இணை ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், சாதிய மனநிலையோடு, சாதிய சிந்தனையில் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த ஆறுமுகம் மற்றும் கவிதா ஆகியோரை ஒரு பெண்ணும் பாராமல் தகாத வார்த்தையில் பேசி கையிலே கட்டையை தூக்கிக்கொண்டு அடிக்க முற்ப்பட்டும், பட்டியலின வீடுகளில் பொருத்திய பைப்புகளை அடித்து சேதப்படுத்திய மாற்று சமுதாயத்தைச் சார்ந்த தமிழரசு மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீதும் குறிப்பாக பொது ஊழியராக இருந்து கொண்டு வன்கொடுமை வழக்குகளில் மிகவும் மெத்தன போக்கோடும், அலட்சியப் போக்கோடும் செயல்படக்கூடிய புதுச்சத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரை கண்டும் காணாமல் செயல்படக்கூடிய நாமக்கல் மாவட்ட காவல்துறையை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் முனைவர் த. குமரவேல் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர். இளமுருகன்
மாவட்ட துணை செயலாளர்,
தோழர்.குமரவேல்
மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர்,
தோழர்.கோபி
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
தோழர். ராஜா
மாவட்ட கொள்கை பரப்புச்ச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோழர். தட்சிணாமூர்த்தி
மாநகரச் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார்.
தோழர். செல்வ வில்லாளன்
மாநில துணை பொதுச்செயலாளர்,
தோழர். செந்தமிழன்
மாநில செய்தி தொடர்பாளர்,
தோழர். கார்த்திக்
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்,
தோழர். கவி வள்ளுவன்
மாநில மாணவரணி துணை செயலாளர்,
தோழர். வினோத் சேகுவேரா
மாவட்டச் செயலாளர் நாமக்கல் கிழக்கு ,
தோழர். சுரேஷ்
மாவட்டச் செயலாளர் திருச்செங்கோடு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தோழர்.வீரமணி
ஒன்றிய செயலாளர் புதுச்சத்திரம் கிழக்கு,
தோழர்.சிவகுமார்
ஒன்றிய செயலாளர் நாமக்கல் கிழக்கு
தோழர். அண்ணாமலை
ஒன்றிய செயலாளர் புதுச்சத்திரம் மேற்கு நன்றியுரை ஆற்றினர்.

மேலும் கண்டன இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சியின் மாவட்ட,மாநகர, ஒன்றிய ,கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
