சென்னை:அகில உலக விட்டு வேலைத் தொழிலாளர் தின த்தை முன்னிட்டு
மனுஷி அமைப்பு மற்றும் சாரா பெண் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமை கோரி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைப்பெற்றது.

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளான சமைத்தல், துவைத்தல், சுத்தம் செய்தல் போன்றவை ஒரு வேலையாகவே அங்கீகரிக்கப்படவில்லை.
தமிழகத்தில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உலகமயம், எந்திரமயம், தனியார்மயம் ஆகியவற்றால் அநேக பெண்கள் தாங்கள் செய்து வந்த வேலையை இழந்து விட்டுவேலைத் தொழிலுக்கு வரும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் இவ்வேலையில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், இந்த வேலைக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாத காரணத்தால் குறைந்த சம்பளத்தில் கிட்டத்தட்ட அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் முழுமையாக ஈடுபடும் வீட்டு வேலைத் தொழிலுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவதும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பதும், பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அறிந்த விசயம்தான். தற்போது தமிழ்நாடு அரசு ஓர் கமிட்டி ஏற்படுத்தி அந்த கமிட்டியும் தமிழக அளவில் பல கலந்துரையாடல்கள் நடத்தி மணிக்கு 37 ரூபாய் என ஊதியம் நிர்ணயம் செய்து அதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் 90% வீட்டு வேலைத் தொழிலாளர்கள் பகுதி நேர தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். அப்படியிருக்கும் போது ஓர் தொழிலாளி மற்றும் அவர் சார்ந்த குடும்பம் வாழ்வதற்கான ஊதியத்தை அரசு நிர்ணயித்துள்ளதா என்று பார்க்கும்போது மிகவும் அதிர்ச்சியூட்டும் ஊதிய அரசாணையாக இருக்கிறது
இந்த அரசாணை.
எனவே வீட்டு வேலைத் தொழிலாளர்கள் வாழ்வதற்கான ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்,
சர்வதேச தொழிலாளர் சங்கம் தனது 100-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் வேலையை ஓர் அந்தஸ்தான வேலை என்று 2011 ஜூன் மாதம் 16ஆம் தேதி அறிவித்து வீட்டு வேலைத் தொழிலாளர்களை கௌரவித்துள்ளதோடு, அன்றைய தினத்தை அகில உலக வீட்டு வேலைத்தொழிலாளர் தினமாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், இந்திய அரசு உடன்படிக்கையில் கூறியுள்ள உரிமைகளை செயல்படுத்த கோரியும், வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரியும் சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமைகளை அரசிடம் தெரிவிக்க அனைத்து வீட்டு வேலை தொழிலாளர்கள் திறளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

