கல்லைக்குறிச்சி:
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கல்லைக்குறிச்சி யில் உள்ள சங்க அலுவலகத்தில் மாநில பிரச்சார செயலர் டி. கந்த நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதன் நிறுவன பொதுச்செயலாளர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் சகலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இதில் மாநில பொதுச்செயலாளர். ஏ. டி. சக்திவேல். மாநில துணைத் தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் பி. குமார்,மாநில அமைப்புச் செயலாளர் பி. ஜெயபிரகாஷ், துணை பொதுச்செயலாளர். எஸ் கல்யாணசுந்தரம்.ஆகியோரும். மாவட்ட செயலாளர். பி. ஆறுமுகம், கல்லைக்குறிச்சி நகர செயலர் வி. காமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:
கல்லைக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு,சிகிச்சை கருவிகள்,எம். ஆர். ஐ சி. டி. ஸ்கேன் வசதிகளை உடனடியாக நிறுவி,மருத்துவ மனைக்கு வரும் நோயாளர்களை. தனியார் மருத்துவமனைகளுக்கும், சேலம், விழுப்புரம் என அலைக்கழிக்கும் நிலையை கைவிட வேண்டும்.
மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் கழிவறைகளை தினமும் சுத்தம் செய்திடவும், போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் மருத்துவ மனை நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது,
கல்லைக்குறிச்சி அரசு கலைக் கல்லூரிக்கு கல்லூரி மாணவர்கள் சென்று வர காலை,மாலை இரு வேலையும், கல்லைக்குறிச்சி பேரூந்து நிலையத்தில் இருந்து மாணவர் சிறப்பு பேருந்து களை உடனடியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக் கொள்வது,
கல்லைக்குறிச்சி நகர அனைத்து பிரதான சாலைகளையும் அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தடுத்திடவும்,
நகராட்சி பேரூந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் இலவச கழிவறை வசதி ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது , மேற்கண்ட
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கல்லைக்குறிச்சி அண்ணல் அம்பேத்கர் திரு உருவச்சிலைசிலை முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் மாநில பொருளாளர் பி. குமார் நன்றியுரை ஆற்றினார்.