454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலை அறவழிப் போராட்டம்!

எழும்பூர்:454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின் பணி நிரந்தரம், வாழ்வாதாரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் அறவழி உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.

மேலும் இதில் கால்நடை பராமரிப்பு துறையில் பணியமர்த்தப்பட்டு II ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் எங்களின் II வருட அனுபவத்தையும் வயது மூப்பின் காரணத்தினாலும், இயற்கை பேரிடர் காலங்களில் நாங்கள் ஆற்றிய சிறப்பான பணியை கருத்தில் கொண்டும் 454 தற்காலிகமாக பணிபுரிந்து வரும் எங்களை பணி நிரந்தரம் செய்து எங்கள் எல்லோருடைய வாழ்வாதாரத்தையும் காத்து வழிவகை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.