திருச்சிராப்பள்ளி:ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட கோரிக்கை விளக்கக்கூட்டம் நெ. 01 டோல்கேட் அருகில் மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.இதில் புலிவலம் சந்திரா மற்றும் கீரனூர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் இச்சங்கத்தின் மாநில தலைவரும் மனித நேயருமான முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நீண்ட கால கோரிக்கைகளான ஊதிய உயர்வு,பணி நிரந்தரம்,ஊதிய நிலுவையை தமிழக அரசு உடனே வழங்கிட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில் கீரனூர் மேனகா நன்றியுரை நல்கினார்.