திருவள்ளுர்:பெருமாள்பட்டு
ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உலக மனநல தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டி. அஜய் அவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு, நிர்வாக அதிகாரி முனைவர். சலீம், முதலாம் ஆண்டு துறைத்தலைவர் ஏ.ராஜீவ் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வின் முன்னதாக முதலாம் ஆண்டு தலைவர் ஏ. ராஜீவ், இவ்விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர், நிர்வாக அதிகாரி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.

அடுத்த நிகழ்வாக கல்லூரி முதல்வர் முனைவர் . பி.ஆர் ரமேஷ்பாபு, சிறப்பு விருந்தினர் டி. அஜய் (மனநல மருத்துவர்) அவர்களை வரவேற்று, அவரை சிறப்பிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து சிறப்புரை வழங்கினார்.

மேலும் மாணவர்கள் தங்கள் மனநல கவலைகளை பயமின்றி பகிரக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஆங்கிலத் துறை ஆசிரியர் திரு. டி. சுரேஷ்குமார் (இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்) சிறப்பு விருந்தினரின் அறிமுக உரையாற்றினார்.

மேலும் சிறப்பு விருந்தினர் அவர்கள் மனநலம், அடிமைத்தன்மை தடுப்பு மற்றும் பாலின உணர்வுபூர்வ விழிப்புணர்வு தொடர்பான முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என வெகுவாக பாராட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் மனநல மருத்துவர் . டி. அஜய், தனது தொடக்க உரையில் ஸபையர் முறையின் மூலம் மாணவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார்.

மனநலம் உடல் நலத்திற்கு சமமானது என்றும்,மாணவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு இலக்குகளை அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இறுதியாக நான்காம் ஆண்டு மாணவர் பி.தீபக் நன்றியுரை நல்கினார்.