திருவள்ளூர்:
பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு சங்கம்,பேஸ் அகாடமி இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். பி .ஆர். ரமேஷ்பாபு , பேஸ் அகாடமியின் நிறுவனர் மோகன் குமார், ரத்தன் டெக்கரின் நிறுவனர் வினய் சேத்தியா, இன்பினிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனர் எல் . பிரகாஷ், ரித்திகா ட்ரேடர்ஸ் நிறுவனர் சதீஷ் ராஜசேகர் ஆகியோர்களை வரவேற்று, மாணவர்களிடையே போதைப் பொருள் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார்.

ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் சலீம் , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் பங்கேற்பை வெகுவாக பாராட்டினார்.

மேலும் முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ஏ. ராஜீவ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்கள் தங்கள் நுண்ணறிவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு, போதை பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகளையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மாணவர்கள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .
மேலும் போதை பொருட்களில் இருந்து விலகி பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதாக உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சுவரொட்டி தயாரிப்பு, கட்டுரைப் போட்டி, குழு விவாதங்கள் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் போன்ற பல்வேறு செயல்பாடுகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் இறுதியாக உடற்கல்வி இயக்குனர் பாண்டியராஜன் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரமுகர்கள் ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சி போதை பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தும் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அமைந்தது.