ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரில் இயங்கி வரும் அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள், இளைஞர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள், உடைகள் மற்றும் அரிசி மூட்டை அளித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர். வழக்கறிஞர் த.குமரவேல் அவர்கள் தலைமையில் தீப ஒளி திருநாள் எளிமையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர்.வினோத் சேகுவேரா மற்றும் ஆதிதமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் தோழர். ராவணன் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில்
மாவட்ட இளம்புலிகள் அணிச் செயலாளர் தோழர்.குமரவேல்,
நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர். சிவக்குமார்,
புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர்.வீரமணி,
ஒன்றிய பொறுப்பாளர் தோழர். அன்பரசு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


