செங்கல்பட்டு:
வேக் அப் கல்வி அறக்கட்டளையின் சார்பாக எளிய பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம்,அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மீட்பரின் திருச்சபையில் இதன் நிர்வாக இயக்குநர் யசோதா மயில்வேல் அவர்கள் தலைமையிலும், அறங்காவலர் மயில்வேல் அவர்கள் முன்னிலையிலும் சிறப்புற நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயக்குமார்
மற்றும் மீட்பரின் சபை போதகர் கிதியோன் ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு 100க்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் பெண்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினர்.

மேலும் வேக் அப் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவினை மிகவும் சிறப்பாக நடக்க உற்ற துணையாக இருந்தனர்.


இந்நிகழ்வில் பொதுமக்கள், சமுக சேவையாளர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் திறளாக கலந்துக்கொண்டனர்.

