சென்னை:ரியல் அறக்கட்டளை-
பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள கார்மேல் சபை வளாகத்தில்
பிரசண்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் இயக்குனர்
அருட் சகோதரி சகாயம் அவர்கள் தலைமையிலும்,
ரியல் அறக்கட்டளை இயக்குனர் முனைவர் லாரன்ஸ் அவர்கள் முன்னிலையிலும் சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்துறையின் சென்னை மண்டல அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் நிகழ்வில் பேசிய மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு அவர்கள் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மறுசீரமைப்பு செய்து வேறு இடத்திற்கு மாற்றக்கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும் எளியோர் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்துறையின் சென்னை மண்டல அலுவலர் ஜெயக்குமார் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கருவறை முதல் கல்லறை வரை அரசு தருகின்ற அனைத்து வகையான நலத் திட்டங்களை விரிவாகவும் எடுத்துரைத்தார்.

ஆர் ஆர் நகர் மக்களுக்கான பல்வேறு விழிப்புணர்வு குறித்து கார்மேல் சபையின் போதகர் பால்ராஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.

முன்னதாக நல வாழ்வு குறித்தும், வருமுன் காப்பது குறித்தும் சுகாதாரமான முறைகள் குறித்தும் மருத்துவர்கள் ஐயப்பன் பால்ராஜ் மற்றும் அக்க்ஷிகா ஆகியோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

இம்மருத்துவ முகாமின் ஒருங்கிணைப்பாளர் முருகன், ரியல் அறக்கட்டளை அறங்காவலர் லட்சுமி, நியூஸ் அறக்கட்டளை இயக்குனர் காளிதாஸ், பிரசன்டேஷன் நிறுவனத்தின் பணியாளர்கள் இசபெல்லா, வாணி, ரியல் அறக்கட்டளை யை சேர்ந்த தீனன், மற்றும் அமுல்ராஜ் அருவி நிறுவனத்தை சேர்ந்த மேரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் அருவி அறக்கட்டளையின் இயக்குனர் அருட்சகோதரி இசபெல்லா மற்றும் அருட்சகோதரி சத்யா ஆகியோரின் வழிக்காட்டுதலின் பேரில் லயோலா கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியை சேர்ந்த சமூக பணி மாணவ, மாணவிகளின் மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்ச்சி நடைப்பெற்றது.