கிறித்தவ மக்கள் களம் சார்பில் தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் மற்றும் பேராயர்கள் நியமனத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்தி விகிதாச்சார அடிப்படையில் தலித் மற்றும் பேராயர்கள் பணியமர்த்த வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை :தொடரும் தீண்டாமை அடிப்படையிலான ஆயர்கள் நியமனத்தை உடனே கைவிட வேண்டும் கிறித்தவர்களில் 80% தலித் கிறித்துவ மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், காலியாக இருக்கின்ற 6,அடுத்து வரும் 2 மொத்தம் எட்டு காலி இடங்களிலும் இனிவரும் அனைத்து காலியிடங்களிலும் விகிதாசாரத்தை எட்டு வரையில் தலித் ஆயர்கள் மற்றும் பேராயர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் .

சென்னையில் வாழும் 65 தலித் கிறித்தவர்கள் மற்றும் கல்வி பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் நிலை தொடர்பாக சென்னை-மயிலை உயர்மறை மாவட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கிறித்தவ மக்கள் களம் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் பெலிக்ஸ் அவர்கள் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் மேத்யூ கூறியதாவது:

கடந்த 14 ஆண்டுகளில் ஒருவர் கூட தலித் கிறிஸ்துவ சமூகத்திலிருந்து ஆயர்களாகவோ, பேராயர்களாவோ தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் இதே 14 ஆண்டுகளில் 10 ஆயர்கள் பேராயர்கள் நியமனம் நடந்துள்ளது.ஆனால் இவர்களில் ஒருவர் கூட தலித் கிறித்துவ சமூகத்தை சார்ந்தவர் இல்லை என்பது மிகுந்த வேதனையை என்றும்,எனவே இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் வாக்குறுதியின்படி விகிதாச்சாரத்தை எட்டும் வரையில் இனி வரும் அனைத்து ஆயர் பணியிடங்களிலும் குறிப்பாக தற்போது காலியாக உள்ள புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டம் மற்றும் குளித்துறை, வேலூர்,சிவகங்கை, சேலம், திருச்சி மற்றும் விரைவில் காலியாக உள்ள கும்பகோணம், தஞ்சாவூர் வரை மாவட்டங்களிலும் தலித் மற்றும் ஆயர்கள் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என அனைத்து தலித் கிறிஸ்தவர்கள் சார்பாக கேட்டுக் கொண்டார்.