செங்கல்பட்டு: சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் மறைந்த ஜெயலக்ஷ்மி அம்மாள் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவரும், தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனருமான சுகுமார் பாலகிருஷ்ணன் தலைமையில் செங்கல்பட்டை அடுத்த சம்பாதி நல்லூர் கிராமத்தில்
சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமை சங்கமான தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் துணைத்தலைவர் டி.ஆர்.மாதேஸ்வரன் மற்றும்
மாநில செயலாளர் ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், செங்கல்பட்டு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக 150 நபர்களுக்கு 10 கிலோ அரிசி ,வேட்டி, சேலை மற்றும் மதிய அறுசுவை உணவு ஆகியவற்றை வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மதுராந்தகம் அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.அப்பாதுரை, சிதன்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே. மாதவன், 6 வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி சூரியகுமார் உள்ளிட்ட அதிமுகவில் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சுகுமார் பாலகிருஷ்ணன் நினைவு பரிசாக பாராட்டு மடல் வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியை தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின்
செயலாளர் சுரேந்திரன்,
செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் அருள், துரைராஜ், சீனிவாசன் ஆகியோர் இணைந்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.