மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவொற்றியூர்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் 3 சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர் சங்க தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் நீதிமன்றம் அருகில் நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று
திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர் நிர்வாகிகள் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சார்பாகவும் புதிய சட்ட திருத்த மசோதாக்களை ரத்து செய்ய வேண்டியும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டங்களை உடனடியாக நிறைவேற்றவே கோரியும் , பழுதடைந்துள்ள திருவொற்றியூர் நீதிமன்ற கட்டிடத்தை சொந்த இடத்தில் அமைத்து நிரந்தர நீதிமன்றம் அமைத்து தர கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
கூட்டமைப்பின் இணை செயலாளர்களான சி. தன்ராஜ்,
என். வெங்கடேசன், ஜி. சந்திரபோஸ், செயற்குழு உறுப்பினர் பொன். விஜயன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டு கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர்.
