பாரம்பரிய மீனவர்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும்: அரசியல் அங்கீகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

சென்னை:பாரம்பரிய மீனவர்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும் என்று சமுதாய சங்கமாக மீனவர் அரசியல் கட்சியாக செயல்படுத்தி வருவதையும் கடந்த தேர்தலில் பரதவ மீனவர்களுக்கான அரசியல் அங்கீகாரம் பெற முடியாததையும் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மண்ணடி அலுவலகத்தில் நடந்தது.

இந்ந ஆலோசனைக்கூட்டத்தில் பரதவ குல மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கடலார், தமிழ் தேசிய அரசியல் கூட்டமைப்பு தலைவர் பாவலர் மு. இராமச்சந்திரன் மற்றும் இரட்டைமலை சீனிவாசனார் மற்றும் அயோத்தி தாசர் அவர்களின் பேத்தியும், செட்யூல்டு வகுப்பினர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் ரேவதி நாகராசன், உலக தமிழன பேரியக்கம் மாநிலத்தலைவர் கரு. சந்திரசேகரன் மற்றும் கடல்சார் மக்கள் நல சங்கமம் பொது செயலாளர் பிரவீன் குமார் பரதவர், ஜெயராஜ், பூமி நாதன் , ராஜாகுமார் மற்றும் நாகராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.