சென்னை:உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை  மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.  

இந்நிகழ்வில்  நாகப்பட்டினம் மாவட்டம், கட்டுமாவடி கிராமம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாரம்பரியமிக்க சமையல் கலை துறையில் முன் அனுபவத்திற்கு பிறகு சமையல் கலை பயிற்சி முடித்து 25 வருடமாக சமையல் கலை துறையில் சிறந்த சமையல் கலை நிபுணராக இந்தியா மற்றும் அயல்நாடுகளில் சென்று மிகச் சிறந்த முறையில் தலைமை சமையல் கலை நிபுணராக சிறப்பாக பணியாற்றி வருபவரும்,மக்களாட்சி கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான நாகை. ஜெ.வீ. துரை ( D.C Tech & F.P.P ( U.S.A) அவர்களுக்கு சிறந்த தலைமை சமையல் கலை நிபுணருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.