தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் புகழ் வணக்க பொதுகூட்டம் மகளிர் அணி செயலாளர் எஸ். பழனியம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இதில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம். எல். இரவி அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் அவர் சிறப்புரையாற்றிய போது, திமுகவும் அதிமுகவும் யாருக்கு டாடா பை பை என்று கூறி வருகிறார்கள், மீண்டும் காமராஜர் ஆட்சி தான் தமிழகத்தில் மலர வேண்டும் என்றும்,மக்கள் இருவருக்கும் டாடா பை பை சொல்ல தயாராகி விட்டனர் என்றும் பேசினார்.

இதில் சேலம் மாவட்ட செயலாளர் குமரேசன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் மயிலாம்பாறை மாரி, நாமக்கல் மாவட்ட செயலாளர் செந்தில் முருகன், சோசியலிஸ்ட் கட்சி தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.