சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநிலப் பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது:ஒன்றிய அரசு
தனது பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 50% லிருந்து 53 %ஆக உயர்த்தி வழங்கி உள்ளது. ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதை பின்பற்றி தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலை படியை உயர்த்தி வழங்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ,ஊர் புற நூலகர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ,
சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பு ஊதியம் மற்றும் மதிப்பு பெறும் பணியாளர்கள் ஆகிய 16 இலட்சம் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை 50 லிருந்து 53 சதவீதம் உயர்த்தி அறிவிக்குமாறும், ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை மூன்று மாதங்களுக்கு ரொக்கமாகவும், அக்டோபர் 2024 மாதத்தின் அகவிலைப் படியை ஊதியத்தில் சேர்க்கும் படியாகவும் அறிவிப்பு வழங்கி தீபாவளி பண்டிகையை 16 இலட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியாக கொண்டாட இனிப்பான செய்தியை வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மக்களின் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
