வடலூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் மாவட்டம்,வடலூர் பகுதியிலுள்ள ஆபத்தாரணபுரத்தில் இயங்கிவரும் வசந்தம் சிறப்பு பள்ளி மற்றும் இல்லத்திலுள்ள சிறப்பு குழந்தைகளுக்கு ஒசூர் மருத்துவமனை பணியாளரும், சமூக சேவகியுமான முனைவர் கண்ணகி மற்றும் அவரது புதல்வர் நவீன்குமார் ஆகியோர் இணைந்து மூன்று வேளை சிறப்பு அன்னதானம் வழங்கினர்.
அவர்களுக்கு சிறப்பு குழந்தைகள் அனைவரும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
