திருவள்ளுர்:
ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட திங்க்ஃபினிட்டி ஹேக்கத்தான் 2K25 நிகழ்ச்சி
கல்லூரி வளாக கலையரங்கத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் முனைவர். ஆர் . பூவேந்திரன், CIO – AIML கிளவுட் ஸ்மார்ட் மொபிலிட்டி, சென்னை, டெக்னோ சைன் நெட்வொர்க்கிங் கன்சல்டன்சி அவர்களின் தலைமையிலும், ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர், முனைவர். பி .ஆர். ரமேஷ் பாபு, கணிப்பொறியியல் துறை தலைவர் முனைவர். பி. மகேஷ், கணிப்பொறியியல் துறை பேராசிரியர் முனைவர். என். ஆர். சங்கர் ஆகியோரின் முன்னிலையிலும் துவக்கி வைக்கப்பட்டது.
இவ்விழாவின் முன்னதாக, கணிப்பொறியியல் துறை பேராசிரியர் முனைவர். எம் . குமார், ( ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து கணிப்பொறி அறிவியல் துறை திட்டத்தலைவர் திருமதி. ஏ. லாவண்யா அவர்கள் சிறப்பு விருந்தினர் பற்றி அறிமுக உரையாற்றினார்.
இளம் புதுமை ஆர்வலர்களை ஒன்றிணைத்து, அவர்களின் தொழில்நுட்பத் திறன்கள், படைப்பாற்றல் மற்றும் உடனடி குறைதீர்க்கும் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
அணிக்கு நான்கு உறுப்பினர்களென புதுமை சாத்தியக்கூறு , தொழில்நுட்ப செயல்படுத்துதல் மற்றும் விளக்கக் காட்சி திறன்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
எஸ்.ஏ .பொறியியல் கல்லூரி, கொங்குநாடு பொறியியல் கல்லூரி, டி. எம். ஐ பொறியியல் கல்லூரி, அப்பல்லோ பொறியியல் கல்லூரி, சவிதா பல்கலைக்கழகம், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, பிரத்யூஷா பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, ஜி .ஆர் .டி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, வேலம்மாள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி எம். ஐ. இ. டி. பொறியியல் கல்லூரி, ஜெயா பொறியியல் கல்லூரி என 35க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சார்ந்த மாணவ மாணவியர் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறந்த வெற்றியாளர்களுக்கு பரிசும்,பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
பரிசு விவரம்:
முதல் பரிசு (₹5000) சவிதா பல்கலைக்கழகம், சென்னை. இரண்டாம் பரிசு (₹3000) வேலம்மாள் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி,
மூன்றாம் பரிசு (₹1500) ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி,
நான்காம் பரிசு (₹750) ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மற்றும் பிரத்யூஷா பொறியியல் கல்லூரி.
இந்நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்கள் மட்டுமின்றி அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான மனப்பான்மைக்காக பெரும் பாராட்டுகளைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விழாவின் இறுதியாக திருமதி. பிரவீனா கணிப்பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் நன்றியுரை ஆற்றினார்.
