சென்னை : ஒய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், நேர்மையாளருமான திரு.சகாயம் அய்யா அவர்களின் அரசியல் பேரவை அமைப்பு மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோயம்பேடு அருகிலுள்ள தனியார் விடுதி அரங்கில் நடைப்பெற்றது.
சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: மிக குறுகிய காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் என்னால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை. அதனால் எனது அரசியல் பேரவை அமைப்பு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனது வேட்பாளர்கள் 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மேலும் கூட்டணி கட்சிகளான தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர்கள் 16 தொகுதிகளிலும், வளமான தமிழகம் வேட்பாளர் 1 தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிவித்தார்..
மேலும் அவர் கூறுகையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் புதிய மாற்றத்துடன்
இளைஞர்களுடன் களம் காண இருப்பதாகவும்,
மக்கள் இயக்கத்தை உருவாக்கும் நோக்கில் தேர்தல் களத்தில் இளைஞர்களை முன்னிலைப்படுத்தி களம் காணவும்,
மதச்சார்பின்மை, பொறுப்பு அரசியல்
(வெறுப்பு அரசியலை நிராகரிக்கவும்),
ஊழல் எதிர்ப்பு,
நேர்மையான அரசை (நாட்டை) உருவாக்கம் செய்யவும்,
அறம், நீதி,நேர்மை மற்றும்
முன்மாதிரி சட்ட மன்ற உறுப்பினர்களாக திகழவும் இந்த தேர்தலில் இளைஞர்கள் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் பேரவை அமைப்பு சார்பில் ஆவடி, ஆலுந்தூர், விருத்தாச்சலம், கடலூர்,மதுரை, ஒமலூர், மயிலாடுதுறை, கடவுண்டம்பாளையம், கோவை (தெற்கு ) உள்ளிட்ட தொகுதிகளிலும்,
தமிழ்நாடு இளைஞர் கட்சி கொளத்தூர்,ராயபுரம், செங்கல்பட்டு வேப்பனஹள்ளி, திருவாரூர்,பல்லாவரம்
உள்ளிட்ட தொகுதிகளிலும்,
வளமான தமிழகம் கட்சி
வில்லிவாக்கம் தொகுதியிலும் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள் என்றும் தெரிவித்தார்…
(எஸ்.ஏ.ராஜ்குமார்
செய்தியாளர்
யுகம் நியூஸ்)
