சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்
பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட சர்மா நகர்,டீச்சர்ஸ்காலனி,டான்போஸ்கோ பள்ளி தெருக்கள்,மல்லிகை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் மல்லிகை குடியிருப்புக்கு வருகை தந்த வேட்பாளர் என்.ஆர்.தனபாலனுக்கு அதிமுக வடசென்னை வடக்கு மாவட்ட இலக்கியச் அணி செயலாளர் தாமல் து.சம்பத் அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்தும், மலர்கள் தூவியும்,ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து வேட்பாளர் தனபாலன் அவர்கள் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றி வைத்து தாமல் து.சம்பத் அவர்களின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு வேட்பாளர் தனபாலன் அவர்களுக்கு ஆளூயர மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக பகுதி,வட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

பிரம்மாண்டமான வரவேற்பை கண்டு மனம் நெகிழ்ந்து போன வேட்பாளர் தனபாலன் அவர்கள் தாமல் து.சம்பத் மற்றும் அவரது துணைவியாருக்கு மாலை அணிவித்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.