திருவொற்றியூர் : நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளருமான கே.குப்பன் அவர்கள் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ். தேவேந்திரன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது கார்த்திக் குப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் அவர் வேட்பு மனு செய்வதற்கு முன்னதாக தேரடி முதல் எல்லையம்மன் கோயில் சாலை வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் திறந்த தேர்தல் வாகனத்தில் தொண்டர்களின் ஆரவாரத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்….

(எஸ்.ஏ. ராஜ்குமார்
செய்தியாளர்
யுகம் நியூஸ்)
