ஆயிரம் விளக்கு:திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.ஆ சி.துறை சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை மாநிலத்தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் ஆணைக்கிணங்க, மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் ஆயிரம்விளக்கு பகுதி 111- வது வட்டம் மாதிரி பள்ளி சாலையின் அருகில் மாவட்ட தலைவர் ஆர். ரஞ்சித்குமார் அவர்களின் தலைமையில் இரெட்டைமலை சீனிவாசனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்..நிலவன், மாநிலச் செயலாளர் எஸ். ரஞ்சித்குமார்,பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் எஸ்.கே உமாபாலன் பி. ஜே.வின்சென்ட்,ஆர். டி.குமார் ஆகியோர் கலந்து கொண்டு புகழ் மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில்
முத்த முன்னோடி சந்திரன்,
வட்ட தலைவர்,எலக்ட்ரிக் சந்துரு,
டாக்டர்.அலி ஜான்,ஷாஜகான் மற்றும் கட்சி நிர்வாகிகள் திறளாக கலந்துக்கொண்டு புகழ் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
ஆறுமுகம்,உலகநாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
