சென்னை:உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு குஜராத் முதல் கொல்கத்தா வரை உள்ள 7500 கி/மீ தூரம் பாரதேசத்தின் கடற்கரையில் உள்ள பிளாஸ்ட்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர்களால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதி கடற்கரையில் உள்ள நெகிழி கழிவுகளை பொது மக்களால் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை அசோக் நகர் சேர்ந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி மாணவிகள் அப்பகுதியில் உள்ள நெகிழி கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பரிய சம்ரச்சனாகதி விதி அமைப்பின் பொறுப்பாளர் தங்கபாண்டியன் செய்தியாளகளிடம் கூறுகையில்”உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தது மட்டுமில்லாமல் 2 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் துவக்க நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளோம் .

மேலும் இந்நிகழ்வில் பனை நடும் துவக்க விழாவை சன்னியாசிகள் சங்க சுவாமி ஜி ஸ்ரீ சதானந்த சரஸ்வதி மற்றும் மாதா அமிர்தானந்தம்மை மடம் நிர்வாகி சுவாமி ஸ்ரீ வினையானந்தா அவர்கள் துவக்கி வைத்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும், மேலும் பனைமரம் ஒரு கர்ப்ப விருட்சக மரமாகும் நிகழ்ச்சியை தொடர்ந்து 18 நாட்கள் கிழக்கு கடற்கரை சாலையில் பனை விதைகளை நடவு செய்ய உள்ளோம் எனவும் பொதுமக்கள் பனை மரத்தை நட்டு அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தால் நோய் நொடியின்றி பொது மக்களாகிய நாம் வாழ்வோம்.

மேலும் இந்த தூய்மை பணியில் சேவை செய்த என்.சி.சி மாணவிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது காவல் படைகுழு ஆகியோர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக நன்றி கூறுகிறோம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாம்பழம் மண்டல சுய சேவை செயலாளர் ராமானுஜம் ,அரிமா சங்க சிங்கார சென்னை மண்டல செயலாளர் மாதவ கிரி, மக்கள் கட்சி பாரதமாதா செந்தில்,சமூக சேவகர் துளசிராமன் , ஜெய் ஹிந்த் இலவச நீட் பயிற்சி மைய தாளாளர் சந்திரசேகர், எக்ஸ்னோரா இண்டர்நேசனல் செந்தில் பாரி, பாபு,சாமிராஜா,தமிழ்நாடு முடிதிருத்துவோர் மற்றும் மருத்துவர் சங்க மாநில செயலாளர், ராஜா பிலிம்ஸ் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் தயா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.