தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தஞ்சாவூர், அருளானந்த நகரிலுள்ள அவரது இல்லத்தில் சின்னம்மா சசிகலா அவர்கள் மலர் தூவி புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் கழக பேச்சாளரும்,ஆசிரியையுமான திருச்சி, டோல்கேட் பகுதியை சேர்ந்த சரளா ராணி என்கிற பிரேமா மற்றும் அ.தி.மு. க விசுவாசியான திருச்சி, பொன்மலைப்பட்டியை சேர்ந்த சாந்தி ஆகியோர் கலந்துகொண்டு சின்னம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இவர்கள் இருவரும் அக்கா மற்றும் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது