சென்னை : துறைமுகம் தொகுதி தி.முக சார்பில் ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள் 1000 பேருக்கு 1000ரூபாய் மதிப்புள்ள அரிசி,பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

பொது மக்கள் சமூக இடைவெளியை சரியான முறையில் பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் இந்த நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் துறைமுகம் பகுதி, வட்ட கழக செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.