மயிலாப்பூர்:
உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்(GLOBAL HUMAN PEACE UNIVERSITY)சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை மயிலாப்பூர் பகுதியிலுள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சென்னை போரூரை தலைமையிடமாக கொண்ட ஆர். ஆர். ஆர் ஹவுசிங்(RRR HOUSING) நிறுவனம் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய இளையோர் சமுதாயத்தினருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதற்காக சமூக சேவகர் ஆர்.ஆர். ஆர்.ஹவுசிங் நிறுவனர் ஆர். ராஜேந்திரன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான மதிப்புறு முனைவர் பட்டம் மற்றும் பாரத சேவ ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற ஆர். ராஜேந்திரன் அவர்களுக்கு அலுவலக நிர்வாகிகள்,ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் தங்களது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.