மதுரை:திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக மதக் கலவரத்தை தூண்ட பாஜக உள்ளிட்ட சங்பரிவார் உதிரிக் கூலிகளை வைத்து சதித் திட்டம் கொண்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு உடனடியாக கலவரத்தை அடக்க காவல்துறையை முடுக்கி விட வேண்டும்.
சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்,
திருப்பரங்குன்றம் மலை குறித்து1920 முதல் 2023 வரை கடந்த 102 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்கள் கூறிய தீர்ப்புகளின் அடிப்படையில் திமுக அரசு சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்கு அநீதியும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதையும் உடனே சட்டத்தின் அடிப்படையில் நீதியை நிலைநிறுத்த வேண்டுவதோடு திராவிட மாடல் அரசு உடனடியாக ஒரு மத நல்லிணக்கக் குழுவை அமைத்திட வேண்டும்,
திருப்பரங்குன்றம் பொதுமக்கள் மத நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்,காலம் காலமாக அனைத்துத் தரப்பு மக்களும் சகோதரதுவமாக வாழ்ந்து வரும் அந்தப் பகுதியில் வெளியூர் ஆட்களை கூலிக்கு அழைத்து வந்து கலவரத்தை தூண்டுபவர்களை அடையாளம் கண்டு காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,
தைப்பூசத் திருவிழா நடக்கவுள்ள நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பக்தர்களிடையே பதட்டத்தை உருவாக்க முயற்சிக்கும் இந்து முன்னணி என்ற பெயரில் காலித் தனத்தை அரங்கேற்ற நினைக்கும் கைக் கூலிப் பட்டாளத்தை தொடர்ந்து காவல்துறை அனுமதிக்கக் கூடாது, மத நல்லிணக்கத்தை விரும்பும் மடாதிபதிகள் ஆன்மீகப் பெரியோர்கள் ஆலிம்கள், மார்க்க அறிஞர்கள்,
வியாபார சங்கப் பிரதிநிதிகள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,
பத்திரிக்கையாளர்கள், நீதித் துறையைச் சார்ந்தோர் போன்றோரை உள்ளடக்கிய குழு அங்கே சென்று மக்கள் ஒன்றுமையாக இருப்பதை உறுதிப்படுத்தி அதை உலகிற்குச் சொல்லி மதகலவரத்தை தூண்டும் ஆர். எஸ்.எஸ் மதவாதிகளை தனிமை படுத்திப் மத கலவரத்தைக் தடுத்திட வேண்டும்,
,மண்டைக்காடு கலவரத்தின் போது தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோர் அடங்கிய குழு களமிறங்கிய பிறகே அமைதி திரும்பியது,
கோவை கார் சிலிண்டர் குண்டு வெடித்த நிலையில் இருதரப்பும் கூடி பேசியதால் மதவாதிகளின் சதி தோற்றுப்போனது.

திருப்பரங்குன்றம் மலையில் தொடக்கத்திலயே அதைச் செய்வது நல்லது, இந்து மதம் என்ற பெயரில் சாதிய, மதவாத கலவரக் கும்பல்கள் உள்ளே நுழைந்து மத நல்லிணக்கத்தை அகற்றி ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்பாட்டால் சமூக நல்லிணக்கத்தை விரும்பும் திருப்பரங்குன்றம் மக்களைத் திரட்டி அவர்களுக்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் பசும்பொன் பாண்டியன் அவர்கள் தெரிவித்தார்.
