கோவை:தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்
இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் இக்கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் கோவை தலைமை அலுவலகத்தில்
நடைபெற்றது.

மேலும் இந்த ஆலோசனைக்
கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி கட்டமைப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பினை விரிவுப்படுத்துதல், கோவையில் நடைபெற இருக்கும் எழுச்சி மாநாடு குறித்து மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் உடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.