தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டி வாயிற் விளக்க கண்டன கூட்டம் !

மாதவரம்:தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க கோரியும், தவறான தகவல்களை பரப்பும் விஷமிகளை கைது செய்ய கோரியும் வாயிற் விளக்கக்கூட்டம் ஆவின் தொ. மு. ச. மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ச. பரமசிவம் அவர்கள் தலைமையில் மாதவரம் மத்திய பால் பண்ணை வளாகத்தில் நடைப்பெற்றது.

மேலும் இந்த கண்டன கூட்டத்தில் அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் மற்றும் ஆவின் ஒய்வூதியர் நலச் சங்கத்தின் தலைவர் கே.கனகராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு விளக்க உரையாற்றினார்.

ஆவின் தொ. மு. ச மாநில இணைப் பொதுச்செயலாளர் இரா. ராஜமாணிக்கம், மாநில துணைத்தலைவர் து. சுப்பிரமணியன்
, அமைப்பு செயலாளர் பி. அல்லிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் எ.ஆல்பர்ட் மனோகரன், கே. பி. ராஜாகண்ணன் மற்றும் அண்ணா தொழிற் சங்க தலைவர் யா. தேவராஜ் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

ஆவின் எஸ்.சி/எஸ்.டி பணியாளர் நலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.திருமாறன், சி. ஐ. டி. யு மாநில பொதுச்செயலாளர் எம்.ஞானம், எல். டி. யு. சி. பொதுச் செயலாளர் எம் ராஜசேகர் கண்டன உரை ஆற்றினர்.

ஆவின் தொ மு. ச. பொருளாளர் தி. கதிரவன் நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்த கண்டன விளக்கக் கூட்டத்தில் ஆவின் பொதுத்துறை நிறுவனத்தை அழிக்க நினைக்கும் தனியார் பால் நிறுவன கைக்கூலியாக உலாவரும் பொன்னுசாமி மற்றும் அவரை சார்ந்த கைப்பாவைகளுக்கு அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கண்டனம் தெரிவித்தல்.

சில ஊழல் அதிகாரிகள் தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளும் விரோதப்போக்கை கைவிட வேண்டும் என அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கண்டனம் தெரிவித்தல்.

தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளான பதவி உயர்வு, காண்டராக்ட் முறையை கைவிடுதல், காலி பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக தொழிலாளர்களின் பணி நிரந்தரம், தையற் கூலி, இரவு பணி கூலி உயர்வு ஒட்டுநர்களிடம் முறையற்ற பணபிடித்தத்தை, கைவிடுதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழ்நாடு ஆவின் ஓய்வூதியர்கள் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், நீதிமன்ற உத்தரவின்படி விடுப்பு உதியத்தை உடனே வழங்க வேண்டும் என ஆவின் அனைத்து தொழிற்சங்கங்கள் மூலம் கோரிக்கைகள் மற்றும் கண்டனங்கள் முன் வைக்கப்பட்டன.