இந்திய குடும்ப நலச்சங்கம்(FPA) சென்னை கிளையின் சார்பாக YWCA, ICWO, PWN அஷ்ரயா ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் YWCA வளாக அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொது மக்களின் பாலியல் நலம் மற்றும் இனப்பெருக்க நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதையும் அவ்வாறு ஏற்படும் பாதிப்பை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்தும் அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பது குறித்தும் விளக்கி பேசப்பட்டது.

இக்கூட்டத்திற்கு குடும்ப நல சங்கத்தின் தலைவர் லீலாவதி அவர்கள் தலைமை தாங்கினார், சங்கத்தின் நிதி ஆலோசகர் பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஒய்.டபிள்யூ.சி. ஏ பொது செயலாளர் வித்யா பத்மினி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கூட்டத்தை துவக்கி வைத்து
துவக்க உரை நிகழ்த்தினார்.

குடும்ப நல சங்கத்தின் கிளை மேலாளர் பத்மா பாலியல் மற்றும் இனப்பெருக்க நலம் குறித்தும், இந்திய செஞ்சிலுவை சங்க திட்ட மேலாளர் கர்ணன் அவர்கள் பேரழிவுகளும் அதன் விளைவுகளும் குறித்து விரிவாக பேசினார்.
சங்க ஆலோசகர் முனவர் பாஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் ICWO நிறுவனத்தின் தலைவர் ஏ. ஜே. ஹரிஹரன் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.