தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்
கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டி விழிப்புணர்வு பேரணி வியாசர்பாடி கே. பி. பார்க் பகுதியில் நடைப்பெற்றது.
‌‍‌‍‌
இந்த பேரணியில்
நிர்வாகப் பொறியாளர் சுடலை முத்துகுமார், உதவி நிர்வாகப் பொறியாளர் மதிவேலன்,
சி. சி. டி. ஓ நிர்மல், மாநகராட்சி அதிகாரி, தினகரன் உள்ளிட்ட
குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பராமரிப்பு குழுவினர் கலந்துக்கொண்டனர்.