வள்ளுவர் கோட்டம்:
சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் நீண்டகால வாழ்வாதார கோரிக்கைகளை மத்திய/மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி
மணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.
சென்னை இ.பி.எஃப்.பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஓய்வூதியர்களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி
மணியோசை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இச்சங்கத்தின் செயலாளர் கே. பி. பாபு அவர்கள் தொடக்கவுரையாற்றினார். மேலும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். திருநாவுக்கரசர்,சி.ஐ.டி.யு
பி.பாலகிருஷ்ணன், அகில இந்திய இ.பி.எஸ் 95 ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓய்வூதியர் களின் நீண்ட கால வாழ்வாதார கோரிக்கைகளான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000/- பஞ்சப்படியுடன் வழங்கிட வேண்டியும்,
இ.பி.எஸ்.95 ஓய்வூதியர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டியும்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முறையாக அமுல்படுத்த வேண்டியும்
ஆன்லைன் பதிவு திட்டத்தை கைவிட்டு நேரடியாக மனுக்களை பெற்றிட வேண்டியும், மூத்த குடிமக்களின் பறிக்கப்பட்ட ரெயில்வே கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இறுதியில் இணைச்செயலாளர் டி.சுரேஷ் குமார் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
மேலும் இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்
சென்னை இ.பி.எஃப் பென்ஷனர்கள் நலசங்க நிர்வாகிகள், அகில இந்திய இ.பி.எஸ் 95 ஓய்வூதியர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துக்கொண்டனர்.
