இந்திய சமுதாய நல அமைப்பின்(ICWO) நிறுவனர் மற்றும் செயலாளராக சமூக நோக்குடன் திறம்பட செயல்பட்டு வருபவர் தான் ஏ.ஜே.ஹரிஹரன்.இவர் கடந்த பல வருடங்களாக சமுதாய பணிகளை தனி ஒருவராக செய்து வருகிறார். மேலும் இவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தல், மனித கடத்தல் மற்றும் மனித வியாபாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல்
தற்போது கும்கி 2, குலசாமி, கிளாஸ்மேட் மற்றும் பாட்டில் ராதா ஆகிய நான்கு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

கும்கி 2ம் பாகத்தில் எம்.எல்.ஏ.வாகவும், குலசாமியில் கிராமத் தலைவராகவும்,
கிளாஸ்மேட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், பாட்டில் ராதாவில் குடிகாரனாகவும் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன் தமிழில் ‘கெட்ட பையன் சார் இந்த காளி’, களவாணி 2 மற்றும் பில்லா பாண்டி ஆகிய திரைப்படங்களில் படங்களில் நடித்துள்ளார்.
விமல், குரு சோமசுந்தரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புக்கு :
98401 88821 86101 55727.
