குரோம்பேட்டை :
சமூக பாதுகாப்பு (சோஷியல் புரொடக் ஸன்)அமைப்பு சார்பில்நடைபெற உள்ள நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
(NVEN)கலை நிகழ்ச்சி மற்றும் மனித உரிமைகள் தினவிழா ஆலோசனை கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் இதன் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தலைமையில் நடந்தது.

மேலும் நடைபெற இருக்கும் சாதனையாளர் விருதிற்கான லோகோவை வழக்கறிஞர் பத்மபிரியா அவர்கள் வெளியிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
இந்த நிகழ்வு நடைபெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக நாட்டியாரதானா ஸ்ரீபிரியா ,
எஸ்.பி.டி (SPT ) சர்வதேச கருத்தரங்க குழு ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் ஜி.யுவராஜ். விழா குழு தலைவராக சாலமன் தினேஷ் மற்றும் நிர்வாகிகளாக ஹரிஹரன் இலக்கியா சஞ்சய் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் இந்த நிகழ்வு குறித்து சோஷியல் புரோடக்ஷன் தலைவர் ஜோசப் இளந்தென்றல் பேசுகையில்,
அடையாளப்படுத்துவது எங்கள் கடமை…ஆளுமையாவது உங்கள் திறமை என்றும்,
வருகின்ற டிசம்பர் மாதம் மனித உரிமைகள் தினம் மற்றும் மகாகவி பாரதியார் பிறந்தநாளினை முன்னிட்டு *SPT International Peace Conference* மற்றும் SPT Peace awards & NVEN 2020 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனையாளர் விருதுகள்-2020 உள்ளிட்ட நிகழ்வுகள் சென்னையில் நடைபெற உள்ளது.

எனவே நம்மை நாமே வடிவமைத்து கொள்வதே ஆகச்சிறந்த செயல் என்றும், இணைந்திருப்போம்
இன்னும் சாதிப்போம்,உலகை நோக்கி உரக்க சொல்வோம்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என நம்பிக்கை ததும்ப கூறினார்.

