சாந்தோம்: நவ, 22

தமிழின தலைவர் மேதகு வேலுபிள்ளை பிராபகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண்தான முகாம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் ஆலோசனையின் பேரில் சென்னை சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றது .

இந்த நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கடல் மறவன் அவர்கள் தலைமை வைத்தார். மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் தி .ஆல்பர்ட் ஸ்டாலின் முன்னிலையில் நடைப்பெற்ற இந் நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராவணன் மற்றும் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் தொகுதி பொருளாலர் நெல்சன் சேவியர், தொகுதி துணை செயலாளர் நாகராஜன், தொகுதி பொறுப்பாளர் சண்முகம்,கிழக்குப் பகுதி செயலாளர் விநாயகமூர்த்தி, மேற்குப் பகுதி செயலாளர் கணேசன், பகுதி தலைவர் மல்லுக ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பில் ரத்த தானம் வழங்கிய இளைஞர்களுக்கு உயிர் நேயர் மாண்பாளர் பட்டம் என்ற சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

எஸ்.ஏ.ராஜ்குமார்

செய்தியாளர்

96 77 34 91 96