திருவள்ளுர் : ஏப்ரல், 27 கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு அமல் படுத்தியதால் பல தரப்பட்ட மக்கள் பொருளாதார நெருக்கடியிலும், வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், நெல்வாய் கிராம காலனியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பின் தடை உத்தரவால் வேலை இழந்தும், வருமானமின்றியும் தனது வாழ்வாதாரத்திற்கும், உணவுக்காகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கு அமல் படுத்த நாளிலிருந்தும், இதுவரையிலும் அரசாங்கமும், எந்த தொண்டு நிறுவனங்களோ, தன்னார்வலர்களோ, அரசியல் கட்சிகளோ உணவுக்காக கூட யாரும் உதவி செய்ய முன் வரவில்லை என்று நெல்வாய் கிராம மக்கள் தங்கள் வேதனையை ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இனிமேலாவது அரசாங்கம் இவர்களை கண்டுக்கொள்ளுமா?

குறிப்பு : இந்த கிராம மக்களின் நிலைமையை அறிந்து இந்திய மாலுமிகள் நல அமைப்பு (ISWOT) தலைவர் திரு.ஆ.பாபு மைலன் அவர்கள் உதவி செய்ய முன் வந்திருப்பது வரவேற்கக்கூடியது.