நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவம்பட்டி பகுதி பட்டியலின பெண்கள் கோயில் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டி செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது ஒரு பொது ஊழியராக இருந்து கொண்டு அப்பகுதி பட்டியலின மக்களை சாதிய வன்மத்தோடு அவமதிக்கும் உள்நோக்கத்தோடு நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கிட்னியை வித்து வேண்டும்மென்றால் நிலம் வாங்கி அதில் கோவில் கட்டிக் கொள்ளுங்கள் என்று இழிவு படுத்தி பேசிய செல்லப்பம்பட்டி வருவாய் ஆய்வாளரை துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை பணிநீக்கம் செய்ய வேண்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறிய போராட்டம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் முனைவர் த. குமரவேல் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகிகளான
தோழர். ஹிட்டாச்சி சிவா
மாநில அமைப்பு துணைச் செயலாளர்,தோழர். வினோத் சேகுவேரா மாவட்ட செயலாளர்
நாமக்கல் கிழக்கு,
தோழர்.தட்சிணாமூர்த்தி
மாநகரச் செயலாளர்,
தோழர். குமரவேல்
மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர்,தோழர். சிவக்குமார்
ஒன்றிய செயலாளர் நாமக்கல் கிழக்கு,தோழர்.வீரமணி
ஒன்றிய செயலாளர்
புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றியம்,
மற்றும் கொசவம்பட்டி ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

