சென்னை :
இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும்
சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே. வெங்கடேசன் , தமிழ்நாடு வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா,முன்னாள் நீதிபதிகள் ஏ. திருநீல பிரசாத் ,எஸ்.முருகேசன் ,முன்னாள் காவல்துறை ஐஜி ராமசுப்பிரமணி ஐபிஎஸ், நாட்டுப்புறப் பாடகர் கலை மாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் அனிதா குப்புசாமி திரைப்பட தயாரிப்பாளர் கேஆர் ,இந்தியன் ஃபோரம் விருதுகள் துணைத் தலைவர் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகாதேவி, அண்ணாமலை பல்கலைக்கழக டீன் டாக்டர் வி. அம்பேத்கர், மாவட்ட முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி நாகநாதன் ஐஎப்எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சென்னையை சேர்ந்தவர் முனைவர் ஹேமலதா MBA., MSc ( psycology).,PGDHRM., இவர் கடந்த 20 வருடங்களாக ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்து வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டுர் பகுதியில் AMTECH EDUCATIONAL TRUST மற்றும் HEMALATHA CHARITABLE TRUST மூலமாக 15 வருடங்களாக அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் 3 வருடங்களாக பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் சேர்க்கை மையம் நடத்தி கல்விப்பணி ஆற்றி வருகிறார்.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான பட்டதாரி மாணவ, மாணவிகளை உருவாக்கி, அவர்களில் பலர் அரசு மற்றும் தனியார் துறையிலும் பணிபுரிந்து வருகிறார்கள்
.
மேலும் இந்த அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கானக்கான ஏழை பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியும், ஏழை மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சியும் கொடுத்து, சான்றிதழ்கள் வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய எளிய குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், குழந்தைகளை ஊக்குவிக்க கல்வி கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும், பத்தாவது மற்றும் பணிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்களுக்கு மேல் படிப்பு தொடர்பாக கல்வி ஆலோசனை வழங்கியும், படித்த தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்புக்காண ஆலோசனை வழங்கி சமுதாய பணியாற்றி வருகிறது.

                                                                                                                               மேலும் இந்தியன் ஃபோரம் அமைப்பின் சார்பில்  சென்னையில் எளிய மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக மேட்டூர் ஹேமா கல்வி அறக்கட்டளை மற்றும் ஹேமா அகடமி நிறுவனர்  முனைவர் ஆர். ஹேமலதா அவர்களுக்கு வித்ய ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர்இந்த அறக்கட்டளை மூலமாக வருகின்ற காலத்தில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகம் அமைக்கும் திட்டமும் இருக்கிறது எனவும்,அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிறந்த சாதனையாளர் விருதும், ஆக்ஸ்வா பல்கலைக்கழகம் மூலம் மதிப்புறு முனைவர் பட்டமும், மதுரை அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை மூலமாக கல்விசார் சிறப்பு விருது,சேவா ரத்னா மற்றும் சாதனையாளர் விருது போன்ற கௌரவ டாக்டர் பட்டங்கள் மற்றும் விருதுகளும் வழங்கி சிறப்பித்தனர் எனவும் தெரிவித்தார்.

தொடர்புக்கு:
Hema Educational Trust – Hema academy
No 24/88, Opp Esi Hospital, West Main Road,mettur Dam, Salem-636403, Tamil Nadu.
Contact number – 081236 29267