ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா!

திருவல்லிகேணி:ஸ்ரீ வி.எஸ்.எஸ் (வர்தமான் சாந்தக்வாசி ஸ்வேதம்பர்) ஜெயின் டிரஸ்ட் சார்பில் மகாவீர் ஜனம் கல்யாணக் (2623 வது பிறந்தநாளை) முன்னிட்டு அஹிம்சா பேரணி மற்றும் அன்னதான விழா திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு அருகில் ஸ்ரீ வி.எஸ்.எஸ் ஜெயின் டிரஸ்ட்டின் செயலாளர் ஆனந்த் நகோரி அவர்கள் தலைமையிலும், நிர்வாக அறங்காவலர் மானக்சந்த் சக்லஜா முன்னிலையிலும் சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் தேரபந்தி சங்க நிர்வாகி சுரேஷ் பாய் சஞ்சேதி,மூர்த்திக் புஜக் சங்க நிர்வாகி லலித் ரத்தோட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்த அன்னதான விழாவில் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

இறுதியில் இந்த டிரஸ்டின் செயலாளர் ஆனந்த் நகோரி கூறுகையில், ஸ்ரீ வி.எஸ்.எஸ்.ஜெயின் டிரஸ்ட் சார்பாக ஒவ்வொரு வருடமும் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அஹிம்ஷா பேரணியில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகளை வாழு வாழ விடு என்கிற உயரிய நோக்குடன் தொடர்ந்து செய்து வருவதாக கூறினார். மேலும் அவர் மஹாவீர் ஜெயந்தி தினத்தில் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.